ஜப்பானில் பல்வேறு வழக்குகளில் சிக்கி தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் தப்பிய நிலையில், அவரை தேட 6000 பொலிசார் களமிறங்கியுள்ளனர்.
பல்வேறு வழக்குகளில் சிக்கிய கைதி ஒருவர் சிறையில் இருந்து தப்பிய விவகாரத்தில் அமைச்சர் ஒருவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த ஒரு வாரம் முன்பு சிறையில் இருந்து தப்பிய குறித்த கைதியை தேடும் பணியில் 6,600 பொலிசாரை ஜப்பான் களமிறக்கியுள்ளது.
27 வயதான Tatsuma Hirao பல்வேறு கொள்ளை சம்பவகங்களில் ஈடுப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதி சிறை அதிகாரிகளின் பார்வையில் இருந்து தப்பிய Hirao, சிறைக்கு வெளியே தலைமறைவாகியுள்ளார்.
தற்போது Mukaishima தீவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதன் அடிப்படையில் அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீவில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை பொதுமக்கள் காலியாகவே வைத்திருக்கின்றனர்.
ஆனால் அங்கு பதுங்கி இருக்கும் கொள்ளையனை தேட வேண்டும் எனில் பொதுமக்களின் அனுமதி வேண்டும்.
மட்டுமின்றி மலை சூழ்ந்த பகுதி என்பதால் ஹெலிகொப்டர் பயன்படுத்தவும் முடியாத நிலை உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.