பிணம் கடந்து செல்கையில் உங்கள் கட்டைவிரலை காட்டிவிடாதீர்கள்!

ஜப்பான் நாட்டில் இறந்துபோனவர்களின் உடலை அடக்கம் செய்ய எடுத்துசெல்லும்போது, அதனை கடந்துசெல்பவர்கள் தங்கள் கட்டை விரலை மறைக்க வேண்டும் என்பது அந்நாட்டு மூடநம்பிக்கைளில் ஒன்று.

கட்டை விரலை oyayubi என ஜப்பானிய மொழியில் அழைக்கின்றனர். அதாவது பெற்றோர் விரல்(parent finger) ஆகும்.

இந்த கட்டை விரலை இறுதி ஊர்வலத்தின் போது அந்நாட்டு மக்கள் மறைத்து வைத்துக்கொள்கிறார்கள். அதாவது, பெற்றோர் இளம் வயதில் இறந்துபோனால், அவர்களது ஆவி பழிவாங்காது.

ஆனால், முன்பின் தெரியாதவர்கள் இறந்துபோனால், அவர்களின் இறுதி ஊர்வலத்தின் போது கட்டை விரலை மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ரோட்டில் ஏதேட்சையாக நடந்துசெல்கையில், சவத்தின் உடலை இறுதிஊர்வலமாக கொண்டுவந்தால், அந்நாட்டு மக்கள் உடனடியாக கட்டை விரலை மறைத்துவைத்துக்கொள்கின்றனர்.

காரணம், அந்த ஆத்மாவானது கட்டை விரலின் நகத்தின் வழியாக உடலுக்குள் புகுந்துவிடும் என் அந்நாட்டு மக்கள் காலம் காலம் நம்பி வருகிறார்கள்.