சீனாவின் பின்சோயு நகரில் வீசிய பலத்த காற்றில் 2005ஆம் ஆண்டு நிறுவிய 62 அடி உயர சீன பேரரசர் குயின் ஷி ஹூயாங்கின் முழு உருவ வெண்கல சிலை முழுவதும் பெயர்ந்து மண்ணில் வீழ்ந்துள்ளது.
சீனாவின் முதல் பேரரசர் குயின் ஷி ஹூயாங்கின் 62 அடி உயரமும் பல தொன் எடை கொண்ட முழு உருவ வெண்கல சிலை ஷாங்டாய் மாகாணத்தில் பின்சோயு நகரின் அடையாள சின்னமாக நிறுவப்பட்டுள்ளது.
சமீபத்தில் பின்சோயு நகரில் வீசிய பலத்த காற்றில் இச்சிலை முழுவதும் பெயர்ந்து மண்ணில் வீழ்ந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மண்ணில் வீழ்ந்து கிடந்த சிலையை கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்திய படங்கள் இணைய தளங்களில் பரவியுள்ளது.
பேரரசர் குயின் ஷி ஹூயாங் சீனாவில் குயின் பேரரசை நிறுவியவர். கி.மு. 206 முதல் 221 வரை இவர் ஆட்சி செய்தார். சீன பெருஞ்சுவரின் முதல் பகுதியை கட்டி தொடங்கி வைத்த பெருமைக்குரியவர்.