பொலிசாரையும், பத்திரிக்கையாளர்களையும் குடிபோதையில் விரட்டி விரட்டி அடித்த இளம்பெண்! வீடியோ

ஹைதராபத்தில் குடிபோதையில் இளம்பெண் ஒருவர் பொலிசாருடன் தகராறில் ஈடுபட்டதோடு, பத்திரிக்கையாளர்களை கல்லால் அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் என்ற பகுதியில் பல திரைப்பட ஸ்டூடியோக்கள் இயங்கி வருகின்றன. அதுமட்டுமல்லாது, அப்பகுதியில் தான் பல முன்னனி நடிகர்களின் வீடுகளும் உள்ளன.

இந்நிலையில், நேற்றிரவு, பொலிசார் அப்பகுதியில் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ஒரு கார் வேகமாக வருவதை கவனித்து அதை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர் பொலிசார்.

அப்போது, காரை ஓட்டியவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தி போதையிலிருப்பது தெரியவந்துள்ளது. அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

இதற்கிடையில், காரில் இருந்து இறங்கி வந்த இளம்பெண் ஒருவர், பொலிசாருடன் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரும் மது போதையில் இருந்ததால் போலீசார், மெதுவாக பேசிக்கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த பத்திரிக்கையாளர்கள் சிலர், இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்துள்ளனர்.

அதை கண்ட அந்த இளம்பெண் ரோட்டில் கிடந்த கல்லை எடுத்து பத்திரிக்கையாளர்களை நோக்கி எறிந்ந்ததோடு விடாமல் விரட்டி விரட்டி எறியத் தொடங்கினார்.

இதைக் கண்ட போலீசார் அந்தப் பெண்ணை எச்சரித்ததோடு, அவரை பற்றி விசாரனையும் செய்து வருகின்றனர்.