பொலிசை அடித்து துவைத்த இளம் பெண்!

ஹரியாணா மாநிலத்தில் தன்னிடம் வரம்புமீறிய பொலிசை இளம் பெண் ஒருவர் அடித்து துவைத்து, அவர் மீது புகாரும் அளித்துள்ளார்.

நேகா ஜங்ரா ஒரு கராத்தே வீராங்கனை ஆவார். இவர் தினமும் காலை 5 மணி முதல் 7 மணி வரை கராத்தே பயிற்சி வகுப்பிற்கு செல்வது வழக்கம். வழக்கம்போல பயிற்சி வகுப்பிற்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது, யாசின் என்ற நபர் இடையில் ஏறியுள்ளார்.

யாசின் சீருடை அணியாமல் இருந்ததால், அவர் பொலிஸ் என்பது நேகாவிற்கு தெரியவில்லை. இதற்கிடையில் நேகாவின் போன் நம்பரை தருமாறு யாசின் கேட்டுள்ளார். ஏன் என்று கேட்டதற்கு, நண்பர்களாக பழகுவோம் என தெரிவித்துள்ளார்.

நேகா மறுத்தவுடன் தனது பாலியல் சீண்டல்களை ஆரம்பித்துள்ளார், இதனால் கோபம் கொண்ட நேகா, யாசினை அடித்து துவைத்துள்ளார். பின்னர், யாசினை நேராக மகளிர் காவல் நிலையம் இழுத்து சென்று, அவர் மீது புகார் அளித்துள்ளார்.

யாசின் பொலிஸ் என்பதால், அவரை விட்டுவிடுமாறு மகளிர் பொலிசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தனது தந்தையின் உதவியோடு, யாசினின் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்துக்கொண்ட நேகா, யாசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் பொலிசிடம் வற்புறுத்தியுள்ளார்

இதனைத்தொடர்ந்து யாசின் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹரியாணா மாநில அளவில் நடந்த கராத்தே போட்டிகளில் தங்கம் வென்றுள்ள நேகா, 2017 பிப்ரவரியில் கோவாவில் நடந்த ஒரு தேசிய அளவிலான போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார்.