தங்கையுடன் சிக்கி பொலிஸாரையே கலங்க வைத்த சிறுவன்! – காணொளி

இந்தோனேசியாவில் வாகன சோதனையில் குட்டி இரு சக்கர வாகனத்துடன் சிக்கிய சிறுவன் ஒருவன் பொலிசாரை கலங்கடித்த வீடியோ காட்சி வைரலாகி வருகின்றது.அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் தனது சகோதரியுடன் குட்டி இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஆபத்தான வகையில் பயணம் மேற்கொண்ட சிறுவன் ஒருவனை பொலிசார் மடக்கி பிடித்துள்ளனர்

விசாரணைக்கு பயந்து அழுது அடம்பிடித்த அந்த சிறுவனின் செயலால் பொலிசார் ஆடிபோனது மட்டுமின்றி, அழுகையை நிறுத்த வழிதெரியாமல் திகைத்த அவர்கள், சிறுவனை சமாதானப்படுத்தி அவனை மீண்டும் வாகனத்தை ஓட்ட அனுமதித்து, பாதுகாப்புடன் வீடு வரை சென்று பெற்றோருக்கு அறிவுரை கூறி ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.