டி.டி.வி.தினகரன் கைது!

காவிரி மேலாண்மை பேரவையை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் டி.டி.வி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் விவசாய சங்கத்தை சேர்ந்த அய்யாக்கண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களை திருச்சி காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

சென்னையில் இடம்பெறும் போராட்டத்தில் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளபோதும், இந்திய மத்திய அரசாங்கம் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் முன்னெக்கவில்லை.

இதன் காரணமாக தமிழக அரசாங்கம் இதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.