கூட்டமைப்பின் முடிவு! கொழும்பு ஊடகம் வெளிப்படுத்திய ரகசியம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 13 பேர் ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்களுடன் இன்று மாலை நாடாளுமன்றத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பல்வேறு நிபந்தனையுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்மைப்பு 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள நிலையில், இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.