தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது.

இலங்கையில் தமிழீழம் அமைய பாடுபட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்.

இந்த நிலையில், இவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கின்றனர்.

‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

தன்னுடைய “ஸ்டுடியோ 18” நிறுவனத்தின் மூலம் வெங்கடேஷ் குமாரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தில் நடிக்கும் நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.