நிகழ்ச்சிக்கு வந்தது ஆர்யாவை திருமணம் செய்ய இல்லை – உண்மையை உடைத்த ஸ்ரேயா – வீடியோ

Enga Veetu Mapillai 30-03-2018: எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற புது நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த தொலைக்காட்சியும் புதுசு என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்.

ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் 16 பெண்கள் கலந்து கொண்டனர். ஆனால் தற்போது பல நிகழ்ச்சிகளுக்கு பிறகு 6 பெண்களே நிகழ்ச்சியில் மீதம் உள்ளனர். சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் போட்டியாளர் ஸ்ரேயா வெளியேறியுள்ளார்.

தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ரேயா சமூக வலைதளத்தில் ஒரு பரபரப்பான பதிவை போட்டுள்ளார். அதாவது, இந்த நிகழ்ச்சியில் நான் ஆர்யாவிற்காக பங்குகொள்ளவில்லை. இதன்மூலம் எனது திறமைகளை வெளிக்காட்டி திரையில் வாய்ப்பு பெறுவேன். அதுதான் எனக்கான இடம், ஆர்யா எனக்கு வேண்டாம் என பதிவு செய்துள்ளார்.

அதோடு நிகழ்ச்சியின் உண்மை முகத்தை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.