தலையில்லாமல் உயிருடன் நடக்கும் அதிசயக் கோழி!

தாய்லாந்தில் தலைவெட்டப்பட்ட கோழி ஒன்று ஒருவாரமாக உயிருடன் வாழ்ந்து வரும் நிலையில் கால்நடை மருத்துவர் ஒருவர் அதை பராமரித்து வருகிறார்.ரத்சபுரி மாகாணத்தில் தான் இந்த அதிசய கோழி கிடைத்துள்ளது.கோழியின் தலை எப்படி வெட்டப்பட்டது என சரியாக தெரியாத நிலையில், வேறு எதாவது உயிரினம் அதை தாக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஒரு வாரத்துக்கு முன்னர் தலை வெட்டப்பட்டாலும், கோழி இன்னும் உயிருடன் இருந்து வருகின்றது.கோழியின் தலை இருக்க வேண்டிய இடத்தில் ரத்தக்கறை படிந்திருக்கும் நிலையில், அது எப்படியோ எழுந்து நிற்கிறது.இதையடுத்து சுபகாடி அருண் தொங் என்னும் கால்நடை மருத்துவர் குறித்த கோழியை தற்போது பராமரித்து வருகிறார்.அதற்கு உணவுகள் கொடுத்து வருவதோடு, ஆண்டிபயாடிக் மாத்திரைகளையும் அருண் கொடுத்து வருகிறார்.

அருண் கூறுகையில், கோழி நன்றாக ஒத்துழைக்கிறது. அதற்கு வாழ்க்கை இன்னும் உள்ளது.கோழியை யாராவது எடுத்து வளர்ப்பார்கள் என நம்புகிறேன். அதன் வாழ்நாள் முழுவதும் பராமரிக்க யாராவது உள்ளார்களா எனக் கேட்டுள்ளார்.

மேலும், கோழியானது கடுமையான இதயம் கொண்ட உண்மையான போர்வீரன் எனவும் அருண் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.கடந்த 1945-லிருந்து 1947 வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவில் மைக் என்னும் கோழி தலையில்லாமல் 18 மாதங்கள் உயிருடன் இருந்த நிலையில், அதுவே அதிக காலம் தலையில்லாமல் வாழ்ந்த கோழி என கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.