ரஸ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் உதயங்க வீரதுங்க கைதுசெய்யப்பட்டமையை இலங்கையின் அரசாங்க செய்தித்தாள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
பல்வேறு பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த அவர், துபாயில் உள்ள பாதுகாப்பான இடம் ஒன்றில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கையின் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த செய்தியை அரசாங்க செய்தித்தாள் வெளியிட்டபோதும் அதனை மாற்று செய்தித்தாள்கள் மறுத்திருந்தன.
இந்தநிலையில் இன்று அதிகாலை பதிப்பில், அரசாங்கம் செய்தித்தாள் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.






