என்னுடன் இரவைக் கழித்தார் டிரம்ப்!

அமெரிக்க  ஆபாசப் பட நடிகையான  ஸ்டோர்மி டானியல்ஸ்  தன்னுடன் அமெரிக்க  ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்   பாதுகாப்பற்ற முறையிலான  உடலுறவில் ஈடுபட்டதாக  தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சி.பி.எஸ். ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

டொனால்ட் ட்ரம்ப் தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர்    அவரது மகள்  ஐவன்காவை  தான் நினைவூட்டுவதாக  தன்னிடம் தெரிவித்திருந்ததாக  அவர் கூறினார்.

தான்  ஜனாதிபதியுடன் 2006  ஆம் ஆண்டில் இடம்பெற்ற மேற்படி காதல் சந்திப்பு  குறித்து 2011  ஆம் ஆண்டில் சஞ்சிகையொன்றுக்கு வெ ளிப்படுத்த முயற்சித்தவேளை மர்ம மனிதர் ஒருவர்  தனக்கும் தனது கைக்குழந்தைக்கும் அச்சுறுத்தல் விடுத்திருந்ததாகவும்  அது முதற்கொண்டு இதுவரை தான்  அச்சம் காரணமாக மௌனம் காக்க நேர்ந்ததாகவும்  ஸ்டோர்மி டானியல்ஸ்  கூறினார்.

அந்த மர்மநபர்  ‘ட்ரம்பை விட்டுவிடு. அந்தக் கதையை மறந்து விடு’  எனத் தெரிவித்தே தனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதன் போது அந்த  மர்ம நபர்   தனது கைக்குழந்தையின் பக்கம் திரும்பி, ‘ இவள் அழகாக இருக்கிறாள்.  இவளுடைய தாய்க்கு ஏதாவது நடக்குமானால் அது  அவளுக்கு  ஒரு களங்கமாக  அமையும்”  எனத் தெரிவித்திருந்ததாக அவர் மேலும் கூறினார்.

அவர் இதுவரை காலமும்  ஜனாதிபதியுடனான உறவு குறித்து  விமர்சிக்க மறுப்புத் தெரிவித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்ப்   தன்னை  ஒரு விசேடத்துவம் பொருந்திய ஒருத்தியாக கருதுவதாகத் குறிப்பிட்டு தான் தனது மகள் ஐவன்காவை தனக்கு நினைவூட்டும்  வகையில் உள்ளதாகத் தெரிவித்திருந்ததாக  ஸ்டோர்மி டானியல்ஸ்  தெரிவித்தார்.