ஏலத்தில் பெண்ணை வாங்கி திருமணம் செய்த இளைஞர்: நான்கே நாளில் தூக்கில் தொங்கிய சோகம்!

இந்தியாவில் ஏலத்தில் பெண்ணை வாங்கி திருமணம் செய்து கொண்ட இளைஞர் திருமணமான நான்கு நாட்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுரோர் பூர் கிராமத்தை சேர்ந்தவர் முகேஷ்.

அந்த கிராமத்தில் பெண்களை ஏலம் எடுத்து திருமணம் செய்யும் பழக்கம் இருந்து வருகிறது. அதன்படி முகேஷ், மோனு என்ற பெண்ணை ரூ.22,000-க்கு ஏலம் எடுத்து திருமணம் செய்தார்.

முதலில் ரூ.17,000 செலுத்திய முகேஷ் பாக்கி பணத்தை திருமணத்துக்குப் பின் தருவதாக வாக்களித்து இருந்தார். ஆனால் திருமணம் முடிந்து 4 நாட்கள் ஆன பிறகும் அவர் ரூ.5 ஆயிரம் பாக்கி பணத்தை திருப்பி தரவில்லை.

இதையடுத்து மோனுவின் பெற்றோர் முகேஷிடமிருந்து அவளை பிரித்து அழைத்துச் சென்ற நிலையில் பாக்கி பணத்தை கொடுத்து விட்டு மனைவியை அழைத்துச் செல் என்று தெரிவித்தனர்.

ஆனால் முகேஷால் மீதி பணத்தை தயார் செய்ய முடியவில்லை.

இதையடுத்து மனைவி பிரித்துச் சென்றதால் மனம் உடைந்த முகேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.