நான் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் எனக் கத்திய துப்பாக்கிதாரி ; நால்வர் பலி : நிறைவுக்கு வந்தது பிரான்ஸ் சம்பவம்

பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிதாரியால் மூன்று பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸாரால் குறித்த ஆயுததாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மொரோக்கோவை சேர்ந்தவராக கருதப்படும் குறித்த துப்பாக்கிதாரி தான் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்திற்கு முன்னர் குறித்த பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸாரை நோக்கி குறித்த நபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.

அதிகளவிலான ஆயுதங்களுடன் இருந்ததாக கூறப்படும் குறித்த துப்பாக்கிதாரி, கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் 130 பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிருடன் இருக்கும் முக்கியமான சந்தேக நபரான சலாஹ் அப்டேஸ்லாமை விடுவிக்குமாறு வலியுறுத்தி வந்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபரை பிரெஞ்சு உளவுப்பிரிவினர் ஏற்கனவே அறிந்திருந்தனர் என்றும், மேலும் அவருடைய தாயார் சம்பவ இடத்தில் இருந்துள்ளார்.

4A7B04AE00000578-5535755-image-a-19_1521817733309  நான் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் எனக் கத்திய துப்பாக்கிதாரி ; நால்வர் பலி ; 16 பேர் காயம் : நிறைவுக்கு வந்தது பிரான்ஸ் சம்பவம் 4A7B04AE00000578 5535755 image a 19 15218177333094A7ADB9300000578-5535755-image-a-11_1521817025757  நான் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் எனக் கத்திய துப்பாக்கிதாரி ; நால்வர் பலி ; 16 பேர் காயம் : நிறைவுக்கு வந்தது பிரான்ஸ் சம்பவம் 4A7ADB9300000578 5535755 image a 11 15218170257574A78957900000578-5535755-An_ISIS_gunman_has_shot_dead_a_shop_worker_and_customer_after_ta-a-42_1521811147503  நான் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் எனக் கத்திய துப்பாக்கிதாரி ; நால்வர் பலி ; 16 பேர் காயம் : நிறைவுக்கு வந்தது பிரான்ஸ் சம்பவம் 4A78957900000578 5535755 An ISIS gunman has shot dead a shop worker and customer after ta a 42 15218111475034A7ADB8200000578-5535755-image-a-9_1521816872706  நான் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் எனக் கத்திய துப்பாக்கிதாரி ; நால்வர் பலி ; 16 பேர் காயம் : நிறைவுக்கு வந்தது பிரான்ஸ் சம்பவம் 4A7ADB8200000578 5535755 image a 9 1521816872706