வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்க!

வயிற்றில் தொப்பை அதிகரித்து விட்டால் இதயநோய் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இப்பிரச்சனைகள் வராமல் தடுத்து, உடலில் உள்ள கொழுப்புகளை வேகமாக கரைக்க டயட்டில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இதோ,

ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலை சூடுபடுத்தாமல், தினமும் ஒரு ஸ்பூன் எண்ணெய்யை வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது சாலட் மற்றும் சூப்பில் கலந்து குடிக்கலாம்.

ஆப்பிள்
ஆப்பிளில் வயிற்றில் சேரும் கொழுப்புகளை அழிக்கும் தன்மைக் கொண்டது. எனவே தினமும் ஒரு நாளைக்கு மூன்று ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தை தினமும் சாப்பிடலாம் அல்லது ஒவ்வொரு உணவு இடைவேளையின் போது ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளலாம். இதனால் வயிற்றில் சேரும் கொழுப்பு எளிதில் கரையும்.

ஆசிட் பழங்கள்
ஆசிட் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்றுக் கொழுப்பை விரைவில் குறைக்கலாம்.

கடல் உணவுகள்
கடல் உணவுகளான மீன், நண்டு அதிகப்படியான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே இந்த உணவுகளை சாப்பிடுவதால், அது உடலில் சேரும் கொழுப்பை குறைக்கும்.

தர்பூசணிப்பழம்
தர்பூசணி பழத்தில் அதிகப்படியான தண்ணீர் மற்றும் பொட்டாசியம் இருக்கிறது. எனவே இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நம் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும். பசி உணர்வுகள் அதிகம் ஏற்படாது.

பாதாம்
தினமும் 3-4 பாதாம் சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.

அவகோடா
அவகோடா பழத்தை சாப்பிட்டு வந்தால், பசியுணர்வு கட்டுப்படுவதுடன். உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும்.

தக்காளி
தக்காளி ஜூஸ் செய்து குடிக்கலாம். தக்காளியை சமைத்து உண்பதை விட பச்சையாக அப்படியே சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.