பாலைவனத்தில் சிக்கி தவித்த சுற்றுலாப் பயணிகள்!

பாலைவனத்தில் சிக்கி தவித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மீட்பதற்கு சவுதி மன்னர் உதவியிருக்கும் செயல் பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

துபாய் நாட்டிற்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அப்படி அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருக்கும் சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வருவதுடன், பாலைவனத்திற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஹன்னா கரேன் அர்ரோயோ என்ற வெளிநாட்டுச் சுற்றுலா பயணி காரில் துபாய் அருகே பாலைவனம் பகுதியில் சென்றுகொண்டிருந்தார்

காரானது பாலைவன மணலில் சிக்கியுள்ளது. இதனால் அவர் மற்றும் உள்ளே இருந்த பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அதன் வழியாக வந்த துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷித் மக்தூம் காரில் சென்றுள்ளார்.

பாலைவனத்தில் சிக்கியிருந்தவர்களைக் கண்ட அவர், தனது காரை நிறுத்தி, அவர்கள் காரை மீட்க உதவியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை ஹன்னா கரேன் அர்ரோயோ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் துபாய் மன்னர் இது போன்று உதவிகள் செய்வது முதல் முறையல்ல என்பவும் பலமுறை இதே போன்று உதவிகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.