திடீர் மரணம் நிகழும் அறிகுறிகள்!

ஒருவர் திடீர் என்று மரணம் அடைவதற்கு இந்த அறிகுறிகள் கூட காரணமாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் தெரிந்தால் உடனே வைத்தியரை நாடவும்.

அறிகுறிகள்
  • தாங்கமுடியாத தலைவலி, முகம் மற்றும் கண்களிக்கிடையே வழக்கத்திற்கு மாறான வலி ஏற்படுதல்.
  • பார்வைத்திறன் குறைதல், ஒரு பொருளை பார்க்கும்போது மங்கலாக தெரிவது அல்லது இரண்டாக தெரிவது.
  • பிறரிடம் பேசுவதற்கும் பிறர் பேசுவதை புரிந்துகொள்வதற்கும் கடினமாக இருக்கும்.
  • பலவீனம், அசைவின்மை மற்றும் உடலின் ஒரு பக்கத்தின் உணர்வின்மை.
  • செய்யும் செயல்களை ஒருங்கிணைக்க இயலாமல் திணறுதல்.
  • வாழ்வில் குழப்பம் மற்றும் வெளிசார்ந்த பிரச்சினைகள்.

இந்த அறிகுறிகளினால் ஏற்படும் மரணத்திற்கு மூளையில் ரத்த கசிவு ஏற்படுவதுதான் காரணம். பொதுவாக ரத்தக்கசிவு நோயானது உடலில் எவ்வித முன்னெச்சரிக்கையும் கொடுப்பதில்லை.

மூளையில் உள்ள cerebovascualr – ல் ஏற்படுகின்ற திடீர் மாற்றத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ரத்தக்கசிவு ஏற்படுவதே Apoplexy ஆகும்.

அதாவது இந்த திடீர் மாற்றத்தால், மூளைக்கு ஆக்சிஜன் மற்றும் சத்துக்களை வழங்கும் பணியை செய்யும் ஆர்ட்டரி(Arteries) அல்லது ரத்த நாளங்கள்(Blood Vessels) தடுக்கப்படுகிறது.

இதனால் ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் இன்றி மூளை செல்கள் சில நிமிடங்களிலேயே இறந்துவிடுகின்றன. இதன் காரணமாக உடனடி மரணம் அல்லது சுயநினைவு இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

காரணங்கள்

மூளையில் அதிகமான இரத்தம் இருந்தால் ரத்தக்கசிவு ஏற்படுகிறது, இதற்கு இரத்தப்பெருக்கு என்று பெயர் (hemorrhagic stroke), இந்த இரத்தப்பெருக்கு மூளையில் சிதைவுகள் அல்லது இரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

அடுத்தவகையாக மூளையில் குறைவான அளவு இரத்தம் இருப்பதன் காரணமாக ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இதற்கு ischemic stroke என்று பெயர்.

இதன் வகையால் ஈடுசெய்ய முடியாத அளவுக்கு ரத்தசெல்கள் இறந்துவிடுகின்றன, 85 சதவீதம் பேர் இந்தவகையால் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.