சிகிச்சைக்கான பற்றுச்சீட்டு அரச மருத்துவமனைகளிலும்!

எதிர்வரும் நாட்களில் அரசாங்க மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் சிகிச்சைக்கான பற்றுச் சீட்டு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரதம் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் ​போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசாங்கம் சுகாதார சேவைக்காக எவ்வளவு பெரும் தொகையை செலவிட்டாலும் அது குறித்து பொது மக்கள் சரிவர உணர்ந்து கொள்வதில்லை.

அதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளிகள் பெற்றுக் கொள்ளும் சிகிச்சைகள் தொடர்பில் அவர்களுக்கு செலவான தொகை குறித்து பற்றுச் சீட்டு ஒன்று வழங்கப்படவுள்ளது.

எனினும், எந்தவொரு கட்டத்திலும் சுகாதார சேவைகள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.