ஒருவருக்கு ஆர்த்ரிடிஸ் என்னும் மூட்டு அழற்சி நோய் வருவதற்கு முக்கிய காரணம், மூட்டுக்களில் கொடுக்கப்படும் தொடர்ச்சியான அழுத்தம்.
நம்மில் பலரும் அது முதுமைக் காலத்தில் வரும் ஒரு மூட்டு சம்பந்தப்பட்ட நோய் என்று நினைப்போம். ஆனால் இந்த ஆர்த்ரிடிஸ் பிரச்சனையானது இளம் வயதினரையும் தாக்குகிறது என்பது உண்மை.
இத்தகைய ஆர்த்ரிடிஸ் பிரச்சனையின் பொதுவான அறிகுறி மூட்டு வலி மற்றும் மூட்டுகள் மரத்துப் போதல் ஆகும். ஆனால் ஆர்த்ரிடிஸ் இன்னும் ஏராளமான அறிகுறிகளை நமக்குச் சுட்டிக் காட்டும்.
ஆர்த்ரிடிஸின் ஆரம்ப கால அறிகுறிகள்?
- உடல் சோர்வு பல்வேறு விஷயங்களுக்கு அறிகுறியாக இருந்தாலும், மிகுந்த சோர்வை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி ஆர்த்ரிடிஸ் நோய்க்கான பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
- ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் இருந்தால், ஒரே வாரத்தில் நாள்பட்ட சோர்வு, பசியின்மை, எடை குறைவு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
- சில சமயங்களில் உடல் சோர்வுடன், அவ்வப்போது மூட்டுக்களில் வலி அல்லது மரத்துப் போதலை அனுபவிக்கக்கூடும்.
- ஆர்த்ரிடிஸ் இருந்தால், மூட்டு இணைப்புக்கள் சிவந்து காணப்படும். இப்படி மூட்டு இணைப்புக்கள் சிவந்து இருப்பதுடன் அரிப்பு, வீக்கம் மற்றும் வலி கூட ஏற்படலாம்.
- மூட்டுக்கள் சூடாக இருப்பது கூட ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதுவும் முட்டுப் பகுதிகள் சூடாகவும், கடுமையான வலியுடனும் இருக்கும்.
- நீண்ட நேரம் சௌகரியமாக இருக்க முடியாமல், மூட்டுகளில் கடுமையான வலி ஏற்பட்டால் அது ஆர்த்ரிடிஸ் வரப் போகிறது என்பதை உணர்த்தும் ஆரம்ப கால அறிகுறிகளுள் ஒன்றாகும்.
- எதிர்பாராத விதமாக கை விரல்களில் புடைப்புக்கள் உண்டாகும். அதுவும் இந்த புடைப்புக்கள் சிறிய அல்லது பெரிய அளவில், மூட்டுக்களுக்கு அருகில் இருக்கும்.
- ஒருவருக்கு உடல் சோர்வுடன், அதிகளவு காய்ச்சல், வியர்வை மற்றும் பசியின்மை போன்றவை இருந்தால், அவர்களுக்கு ஆர்த்ரிடிஸ் இருக்க வாய்ப்புள்ளது.
குறிப்பு
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தும் நாம் அதை கூர்ந்து கவனித்து, மருத்துவரை அணுகினால் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை தீவிரம் அடையாமல் தடுக்கலாம்.