இழந்த செல்வம் மீண்டும் கிடைக்க???

இழந்த செல்வம், சரிந்த புகழ், கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம் அனைத்தையும் திரும்ப பெற எளிய பரிகாரம் உள்ளது. அதற்கு வராகி அம்மனை வழிபடவேண்டும்.

அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார் வராகி அம்மன்.

திருமாலின் வராக அம்சமாவார், இவர் வராகமெனும் பன்றி முகமும், எட்டு கரங்களையும் உடையவர்.

பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்.

மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.

கோவில்கள்

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. இக்கோயில் உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.

வழிபாடு

வாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து முதல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள், மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து, அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டுதல் வைத்தால் இழந்த அனைத்தையும் திரும்ப பெறலாம்.

கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வந்தாலும் இழந்த செல்வங்களை மீளப்பெறலாம்..