மீண்டும் சந்தர்ப்பத்தை தவறவிடுகிறது இலங்கை: சர்வதேச அழுத்தம் அவசியம்….

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், தமிழர்களின் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு என்பவற்றால் இலங்கை அரசாங்கம் மீண்டும் சந்தர்ப்பத்தை தவறவிடுகிறது என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் உறுதியளித்த விடயங்களை இலங்கை அரசாங்கம் தாமதமாக நிறைவேற்றுவதாகவும், இதனால் நல்லிணக்க அரசாங்கம் நம்பிக்கையை இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சர்வதேசத்தின் முன்னெடுப்புக்கள் இலங்கை தமிழர் விடயத்தில் நம்பிக்கையை தருவதாகவும் அந்த பேரவை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளில் இலங்கை ஏற்றுக்கொண்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்த சர்வதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அழுத்தம் தரவேண்டும் என்று உலக தமிழர் பேரவை கோரியுள்ளது.

இதேவேளை காணாமல்போனோர் தொடர்பான அலுவலக செயற்பாடுகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படுவதற்கு, சர்வதேசம் உரிய ஒத்துழைப்புக்களை வழங்கும் என்றும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.