நெட்வொர்க் பிரச்னை: வருந்துகிறோம் -ஏர்டெல்!

சென்னையில் சில பகுதிகளில் பாதிக்கப்பட்டிருந்த எர்டெல் சேவை தற்போது முழுமையாக சீரானது. ஏர்டெல் நெட்வொர்க் பிரச்னைக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளது.நாட்டின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் சேவை கடந்த சிலமணி நேரங்களாக சரிவர கிடைக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இண்டர்நெட் கிடைக்கிறது என்றும் கால் செய்ய முடியவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

மேலும் முதலில் இப்பிரச்னை வடஇந்திய ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இருந்த நிலையில் தற்போது தென்னிந்தியாவிலும் தொடர்கிறதாக புகார்கள் எழுந்தன. மேலும் 4ஜி சிம்மில் 2ஜி சேவை தான் கிடைக்கிறது என்று இணையவாசிகள் கொந்தளித்து வந்தனர்.

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் இந்த நெட்வொர்க் தடைக்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவன அதிகாரி கூறுகையில், சென்னையில் சில பகுதிகளில் பாதிக்கப்பட்டிருந்த ஏர்டெல் சேவை முழுமையாக சீரானது. சிக்னல் கிடைப்பதில் பிரச்னை என்றால் செல்போனை ரீஸ்டார்ட் செய்யவும் என தெரிவித்துள்ளார்.