மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை நமது நிம்மதியான தூக்கத்தை கெடுப்பவை ஆகும். தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் குறிப்பிட்ட சில நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடும்.
இந்த தூக்கமின்மை பிரச்சனையை தடுக்க சில இயற்கை உணவுகள் உதவுகிறது. அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை இரவு நேரத்தில் உட்கொண்டு வந்தாலே போதும் நிச்சயம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
லெட்யூஸ்
லெட்யூஸ் என்னும் கீரை அனைத்து வகையான சாலட்டுகளிலும் சேர்க்கப்படுகிறது. இந்த கீரையில் லேக்டுகேரியம் என்னும் மயக்கமூட்டும் பண்புகள் உள்ளது.
எனவே இக்கீரையை இரவு நேரத்தில் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
பிஸ்தா
பிஸ்தாவில் மக்னீசியம், புரோட்டீன், மற்றும் விட்டமின் பி6 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் இந்த நட்ஸ்களை இரவு நேரத்தில் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் மிகச்சிறந்த காலை உணவு. ஆனால் இந்த ஓட்ஸை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அதில் உள்ள மெலடோனின், விரைவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறத் தூண்டும். எனவே இரவிலும் சாப்பிடலாம்.
முழு தானியங்கள்
இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் உணவுகளுள் முழு தானிய உணவுகளும் ஒன்று. இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து விரைவில் உறக்கத்தை தருகிறது. எனவே இரவு தூங்கும் முன் முழு தானிய பிரட்டை சாப்பிட்டாலே போதும்.
கிவி
கிவி பழத்தில் விட்டமின் C, E, ஃபோலேட் மற்றும் செரடோனின் போன்றவை ஏராளமாக உள்ளது. இது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.
எனவே தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் கிவி பழத்தை தினமும் இரவில் ஒன்று சாப்பிட்டு வந்தால் ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.