மிரளவைத்த மூன்று விரல் கொண்ட மனித உருவம் மனிதனே அல்ல!

பெருவில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று விரல் கொண்ட மனித உருவம் மனிதனே அல்ல என்று ரஷ்ய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தென் அமெரிக்க நாடான பெருவின் மலைப்பகுதியில் மெக்ஸிகோ பத்திரிகையாளர் ஜெமி மவுஸன் என்பவரால் கடந்த ஆண்டு பதப்படுத்தப்பட்ட மனித உருவம் கொண்ட உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.கால் மற்றும் கைகளில் நீளமான 3 விரல்கள் மட்டும் கொண்ட அந்த உருவம், அமர்ந்த நிலையில் உள்ளது.இந்த உடல் குறித்து ரஷ்யாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் கான்ஸ்டன்டன் கோரட்கோவ் ஆய்வினை மேற்கொண்டார்.

அவரது ஆய்வில், அந்த உருவத்தின் டிஎன்ஏ சோதனையில் அந்த உருவம் மனிதன் அல்ல என்றும் ஆனால் வேற்றுக் கிரகவாசியா என்பது குறித்து சரியாக கண்டறியமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.