பெண்கள் வாழ்வதற்கு மிகச் சிறந்த நாடுகள் தெரியுமா?

என்ன தான் உலகில் பெண்கள், ஆண்களுக்கு இணையானவர்கள் என்று கூறினாலும், அவர்களை பாலியல் வன்கொடுமை செய்வது, ஒரு அடிமை போல் நடத்துவது என்பது தற்போது உள்ள காலத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் உலகமகளிர் தினத்தை முன்னிட்டு 80 நாடுகளில் உள்ள 9,000 பெண்களிடம் உங்களுக்கு பிடித்த நாடு எது, நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை எந்த நாட்டில் இருந்தால் உணர்வீர்கள், பொருளாதாரம், சமமாக நடத்துவது ஆகியவைகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு மொத்தம் 10 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது. மதிப்பெண்கள் அடிப்படையில் பெண்கள் மொத்தம் 21 நாடுகளை தெரிவு செய்துள்ளனர்.

முதல் இடத்தில் டென்மார்க்கும், இரண்டாவது இடத்தில் சுவீடனும், மூன்றாவது இடத்தை நார்வேயும் பிடித்துள்ளது.

பெண்கள் வாழ்வதற்கு மிகச் சிறந்த 21 நாடுகள்
  1. டென்மார்க்
  2. சுவீடன்
  3. நார்வே
  4. நெதர்லாந்து
  5. பின்லாந்து
  6. கனடா
  7. சுவிட்சர்லாந்து
  8. அவுஸ்திரேலியா
  9. நியூசிலாந்து
  10. ஜேர்மனி
  11. லக்ஸ்சம் பெர்க்
  12. ஆஸ்திரியா
  13. பிரித்தானியா
  14. பிரான்ஸ்
  15. அயர்லாந்து
  16. அமெரிக்கா
  17. ஜப்பான்
  18. ஸ்பேயின்
  19. இத்தாலி
  20. பேர்ச்சுகல்
  21. போலாந்து