பேஸ்புக் விடயத்தில் இலங்கையின் செயற்பாடு தொடர்பில் அமெரிக்க ஊடகமொன்று கேள்வி எழுப்பியுள்ளது.
பேஸ்புக்கில் வெளியிடப்படும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் பொய்யான செய்திகளை நீக்க அமெரிக்காவினால் முடியாதபோது, இலங்கையால் எவ்வாறு முடியும் என்று அமெரிக்காவின் சீ.என்.பி.சி ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது
கடந்த காலங்களில் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் பேஸ்புக்கி;ல் பிரசுரிக்கப்பட்டபோது அவற்றை தடுக்க இலங்கை அரசாங்கம் முயற்சிக்கவில்லை என்றும் சீஎன்பிசி தெரிவித்துள்ளது.
கண்டியில் நடைபெற்ற வன்முறை சம்பங்கள் வேறு இடங்களுக்கும் பரவாது தடுக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை ஏற்படுத்தப்பட்டது.
இதனூடாக வன்முறை பரவுவதை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






