அமெரிக்கவினால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து இலங்கை விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவினால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து இலங்கை விமானப்படைக்கு குறித்த விமானங்களை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷ்ய அரசுக்கு சொந்தமான, Rosoboronexport நிறுவனம் ஆயுத ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனம், 2014ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்க திறைசேரியினால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் மூலமே இலங்கை விமானப்படைக்கான விமானங்களை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளன.
எம்.ஐ-171 உலங்குவானூர்திகள்-10, ஐ.எல் -76 எம் சரக்கு விமானங்கள் -02, எஸ்.யூ-30 தாக்குதல் போர் விமானங்கள் -06 என்பனவே இந்த நிறுவனத்தின் மூலம் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.






