ஒரு பலூன் போதும்: முதுகு வலியை விரட்ட!

எந்த ஒரு உடல்நலக் குறைபாடுகள் இந்தாலும் அதற்கு முறையான உணவு முறைகளை போன்று முறையான உடற்பயிற்சிகளை பின்பற்றினால் நிறைய பலன்களை பெறலாம்.

அதற்கு பலூன் இருந்தால் போதும். அதை கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையை பின்பற்றி செய்ய வேண்டும்.

பயிற்சிகள் -1

நம் உடலின் தலை, இடுப்பு, குதிகால் சுவற்றில் படும்படி 90 டிகிரி கோணத்தில் சாய்ந்து நின்று கொண்டு அகலமான பெரிய அளவிலான பலூனை கால் முட்டியின் இடையே வைத்து மூச்சைச் சீராக இழுத்து விட வேண்டும்.

அதேபோல் தலை, இடுப்பு மற்றும் குதிகால் சுவற்றில் படும்படி 90 டிகிரி கோணத்தில் சாய்ந்து பாதி அமர்ந்த நிலையில் பெரிய அளவிலான பலூனை முதுகுப் பகுதிக்கும் சுவற்றுக்கும் இடையே வைத்து மூச்சைச் சீராக இழுத்து விட வேண்டும்.

பலன்கள்
  • கால் தசைப் பிடிப்புகள் நீங்கும்.
  • உடலின் சமநிலைத் தன்மையை மேம்படும்.
  • இடுப்புவலி, முதுகுவலி குறையும்.
  • கீழ் இடுப்புத் தசைகளில் ரத்த ஓட்டம் சீராகும்.
    பயிற்சிகள் – 2

    ஒரு கையால் சிறிய பலூன் ஒன்றைப் பிடித்துக் கொண்டு மூச்சை மூக்கின் வழியாக சீராக இழுத்து 3 விநாடிகள் கழித்து, மூச்சை வெளியேற்ற வேண்டும்.

    மூச்சை இழுக்கும் போதும், விடும் போதும் பலூனில் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    அதேபோல் விரிப்பில் அமர்ந்து அல்லது படுத்துக் கொண்டு பலூன்களை ஊதும் போது, சிறிது இடைவெளி விட்டு மூச்சை இழுத்து, மறுபடியும் ஊத வேண்டும்.

    பலன்கள்
    • மேல் மற்றும் அடி வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் உறுதியாகும்.
    • உடலுக்குள் சுவாசம் சீராகப் பரவி, அழகான உடல் அமைப்பைத் தரும்.
    • நுரையீரலுக்குள் சீரான சுவாசச் சுழற்சி நிகழும்.
    • வயிறு மற்றும் முதுகுப் பகுதியில் உள்ள தசைகள் இறுகும்.
    • இடுப்பு மற்றும் முதுகுவலி நீங்கும்.