இந்தியாவில் ஆபாச படம் பார்த்து கொண்டிருந்த கணவனை திட்டிய மனைவி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள துண்டிகல் பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாஷா(30), வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ரேஷ்மா சுல்தானாவுக்கும் இவருக்கும் திருமணம் நடைபெற்று 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆனால், பாஷா அடிக்கடி தன் செல்போனில் ஆபாச படங்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் பாஷா ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த போது தன் மனைவியிடம் வசமாக சிக்கியுள்ளார்.
‘எப்ப பார்த்தாலும் இதே வேலையா போச்சு. இப்ப அதை நிறுத்தறீங்களா, இல்லையா?’ என கோபமாக திட்டியபடி வைபை இணைப்பை துண்டித்து, செல்போனையும் பிடிங்கியுள்ளார் ரேஷ்மா.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் பாஷா, ரேஷ்மாவின் முகம், கண்கள் மற்றும் தலை என சரமாரியாக தாக்கிவிட்டு அவரின் தாய் வீட்டிற்கு சென்று விட்டுள்ளார்.
இதுகுறித்து ரேஷ்மா குடும்பத்தார் புகார் அளித்துள்ள நிலையில் வழக்கு பதிவு செய்து பாஷாவை பொலிசார் தேடி வருகின்றனர்.







