இந்தியாவில் தீராதா நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை கருணைக் கொலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த கருணைக் கொலை குறித்த வழக்கின் தீர்ப்புகள் வெளியாகியுள்ளது.
அந்த தீர்ப்பில், மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு. அதனால் தீராத நோய் தாக்கிய நபர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், உயிர்பிழைக்க வழியில்லாதவர்களுக்கு செயற்கை சுவாசம் உள்ளிட்டவற்றை நிறுத்த அனுமதி வழங்கியுள்ள நீதிமன்றம், கருணைக்கொலை செய்வதற்கு வழிமுறைகளையும் வகுத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.






