சிறுநீர் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலில் உள்ள சிறுநீரகங்களில் உருவாக்கப்படும் திரவ வடிவிலான ஒரு கழிவுப்பொருள் அல்லது பக்கவிளைவுப் பொருளாகும்.
இது சிறுநீரகத்தில் உருவாகி, சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அங்கே சேகரிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறுநீர்வழி மூலம் உடலில் இருந்து வெளியேறுகின்றது.
சிறுநீரில் இருக்கும் வேதிப்பொருள்கள்
சிறுநீரில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் (0.750கி/), யூரியா (0.93கி/லி), குளோரைடு (1.87 கி/லி) சோடியம் (1.17 கி/லி) கிரியேட்டினைன் (0.670கி/லி) ஆகிய வேதிப்பொருள்கள் அடங்கியுள்ளன.
சிறுநீரின் நிறம்
பொதுவாக சிறுநீருக்கு நிறம் கிடையாது. ஆனால் நாம் உண்ணும் உணவு, பருவ நிலை மாற்றம், நம்முடைய உள்ளுறுப்புகளின் நிலை, தட்பவெப்பம் ஆகிய பல காரணங்களால் நம்முடைய சிறுநீரின் நிறம் அவ்வப்போது வேறு வேறாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
சிலருக்கு பருவ மாற்றத்தால் சிறுநீரின் நிறம் மாறும். சிலருடைய உணவுப் பழக்கத்துக்கு ஏற்ற நிறம் மாறும். நிறம் மாறுவதற்கு இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. சிறுநீரை எந்தெந்த விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம்?
உரமாக பயன்படும்
மனித சிறுநீரை வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். பெருகி வரும் மக்கள் தொகையால் உற்பத்தியாகும் மனித கழிவுகளை மேலாண்மை செய்வது என்பது வளரும் நாடுகளில் பெரிய சவாலாக மாறி வருகிறது.
பொதுவாக மனித சிறுநீர் நச்சுத்தன்மையற்றது என்றாலும் அதில் உள்ள யூரியா, குளோரைடு மற்றும் சோடியம் உப்புகள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது. மனித சிறுநீரை உரிய முறையில் பயன்படுத்தினால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
இதன் பயன்கள் தமிழகத்திற்கும் கிடைக்கச் செய்ய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறை சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது.
நீர்ச்சத்தின் அளவை காட்டும் கருவி
நம்முடைய சிறுநீரை வைத்தே நம்முடைய உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உங்களுடைய சிறுநீரின் நிறம் நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று சொல்கிறதென்று.
எவ்வளவுக்கு எவ்வளவு உங்களுடைய சிறுநீர் நிறமற்று கண்ணாடி போல இருக்கிறது அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.
நோய்க்கான அறிகுறி
சிறுநீர் என்றவுடன் நாம் கிண்டலாக எடுத்துக் கொள்வோம். ஆனாலும் அதையும் தாண்டி, நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தையும் நீர்ச்சத்தையும் அளக்கும் மீட்டராக நம்முடைய சிறுநீர் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
அதோடு நம்முடைய உடலில் இருக்கும் பாதிப்பகள் குறித்து நம்மடைய சிறுநீரே வெளிக்காட்டிவிடும். சிறுநீர் சிவப்பு அல்லது பிங்க் ஆக வந்தால் சிறுநீரகக் கோளாறு இருக்கிறதென்று அர்த்தம்.
பழுப்பு நிறம் கல்லீரல் குறைபாட்டையும் நீலம் அல்லது பச்சை நிறம் அதிக மருந்துகள் உட்கொண்டதன் விளைவு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
முகப்பரு, கரும்புள்ளிகளைப் போக்கும்
சிறுநீரை முகத்தில் எப்படி அப்ளை செய்வது என்று நினைக்கலாம். ஆனால் உண்மையிலேயே சிறுநீரை முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பருக்கள், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும்.
இது இப்போது பயன்படுத்தப்பட்டிருநு்தாலும் நம்முடைய முன்னோர்கள் இந்த முறையை பின்பற்றியிருக்கிறார்கள் என்று புராண தொன்மங்களில் பார்க்க முடிகிறது.






