முன் ஜென்மத்தில் செய்த பாவம் இடைவிடாது துரத்துகின்றதா…?

ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான உழைப்பை கொட்ட தயாராக இருந்தும் தங்களது ஜாதக கட்டங்களினால் சரியாக உழைக்க முடியாமலோ அல்லது காரணமே இல்லாது தடைகளோ ஏற்படக்கூடும்.

ஒவ்வொரு ராசிக்காரர்களும் பல்வேறு பரிகாரங்களை செய்து இருப்பார்கள், எனினும் உரிய பலன் கிடைத்திருக்காது. நம்முடைய ஜாதகப்படி நமக்கிருக்கும் தோஷத்தை அறிந்து அதற்கேற்ப பரிகாரங்கள் செய்தாலும் அதன் முழு பலன் நமக்கு கிடைக்காமல் துன்பங்கள் தொடரும்.

இதற்கு காரணம், நீங்கள் செய்த பரிகாரம் பலனளிக்கவில்லை என்பதேயாகும். பரிகாரம் பலனளிக்காமல் போவதற்கும் வாய்ப்புண்டு என்பது இப்போது தான் பலருக்கும் புதிதாக இருக்கும்.

ஆம், இதற்கு காரணம் கர்ம விணை. உங்கள் ஜாதகத்தில் என்ன கர்ம வினை நடக்கிறது என்பதை முழுதாக அறிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரங்கள் செய்ய வேண்டும்.

மூன்று வகை

இந்த கர்மவினை மூன்று வகைப்படும். தெரிந்தே செய்த பாவங்களான த்ருத கர்மா, செய்த பாவத்தை உணர்ந்து திருந்தியிருப்பது அல்லது மன்னிப்பு கேட்பது த்ருத அத்ருத கர்மா மற்றும் தெரியாமல் செய்த பாவங்கள் அத்ருத கர்மா.

த்ருத கர்மா

தவறு என்று தெரிந்தே செய்த பாவங்கள் இதனைக் குறிக்கிறது. முன் ஜென்மத்தில் நீங்கள் தெரிந்தே செய்த குற்றங்களினால் இந்த கர்மவினை தொடர்கிறது.

தெரிந்தே செய்த பாவங்கள் என்றால் திருடுவது, ஏமாற்றுவது, வயதான பெற்றோரை கவனிக்காமல் விடுவது, நம்பிக்கை துரோகம் செய்வது ஆகியவை தெரிந்தே செய்த பாவங்கள் பட்டியலில் இடம்பெறும்.

இந்த பாவங்கள் செய்து அதற்குரிய பரிகாரம் செய்தாலும் பெரிதாக பயன் இருக்காது. அன்னதானம் வழங்கி ஏழை மக்களை பசியாற வைப்பதன் மூலம் உங்களது சந்ததியினருக்கு இந்த பாதிப்பு வராமல் இருக்கும்.

த்ருத அத்ருத கர்மா

பாவத்தை செய்துவிட்டு அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்பவர்கள் இந்த வகை. முன்ஜென்மத்தில் செய்த இந்த தவறு அடுத்த ஜென்மத்திலும் தொடரும்.

உங்களது ஜாதகத்தில் லக்னம்,சந்திரன் சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வை இருக்கும். முழு மனதுடன் பரிகாரப் பூஜை மேற்கொண்டால் இதிலிருந்து நீங்கள் மீள முடியும்.

அத்ருத கர்மா

முன் ஜென்மத்தில் தெரியாமல் செய்த பாவங்கள் அடுத்த ஜென்மத்திலும் தொடரும் போது இந்த கர்மவினை உங்களுக்கு தொடர்ந்திடும், இது எளிதில் மன்னிக்ககூடியதாகவே இருக்கும்.

தொடர்ந்து நம்பிக்கையுடன் இறைவனை வேண்டினாலே இதற்கு போதுமானது, வேண்டுமானால் ஏழை எளியவருக்கு உதவி செய்திடுங்கள்.