சிறுநீரகக் கற்களை கரைக்க??

சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள், சில வகை காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் எளிதாக, இயற்கையான முறையில் சிறுநீரகக் கற்களை கரைக்கலாம்.

சிறுநீரக் கற்களை கரைக்க உதவும் காய்கறிகள் குறித்து இங்கு காண்போம்.

கேரட் மற்றும் பாகற்காயில் பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளதால், இவை சிறுநீரக் கற்களை படியவிடாமல் தடுப்பதோடு, அவற்றை கரைக்கவும் உதவுகின்றன.

வாழைப்பழம், எலுமிச்சையில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் சிட்ரேட் ஆகியவை,சிறுநீரக் கற்களின் ஆக்சலேட் என்ற வேதிப்பொருளுடன் சேர்ந்து அதைச் சிதைத்து விடுகின்றன. இதனால் சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது.

சிறுநீரகக் கற்களை கரைக்கும் நொதிகள் அன்னாசிப் பழத்தில் உள்ளதால், இதனை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரகக் கற்களை கரைக்கலாம்.

இளநீருடன், சிட்ரஸ் பழச்சாறு மற்றும் வாழைத்தண்டு சாறு ஆகியவற்றை சேர்த்து, தினமும் குடித்து வந்தால் சிறுநீரகக் கல் பிரச்சனை நீங்கும்.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி, ஓட்ஸ் போன்றவையும் சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கும்.

இதனை தவிர்க்க வேண்டும்:

சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்கள் பாஸ்பேட் மிகுந்த காபி, டீ, பிளாக் டீ, சோடா, செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அன்றாடம் சாப்பிடும் உணவில் உப்பு, புளி, காரம், மசாலா ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வது சிறுநீரகக் கல் வருவதை தடுக்கும்.