தற்போது சாதாரண பிரச்சினைகளுக்கு கூட தற்கொலை தான் முடிவு என பலரும் தவறான பாதையில் சென்று தனது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.
காதல் பிரச்சினை, குடும்பபிரச்சினை, கடன் பிரச்சினை எதையும் சமாளிக்க முடியாமல் பலரும் தற்கொலை செய்யும் சம்பவங்களை நாம் அதிகமாக அவதானித்து வருகிறோம்.
தற்கொலை செய்வதற்கு வரும் துணிச்சல் இவர்களுக்கு வாழ்வதற்கு வராதது ஏன்?… ஆம் இந்தியாவில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் காவல் நிலையத்தில் செல்வம்(30) என்பவர் தீக்குளித்து மரணமடைந்துள்ளார். குடும்பத்தகராறு குறித்து புகார் அளிக்க சென்றவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.






