கிவி மற்றும் அவகேடோ* கிவி பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் அவகேடோ பழத்தின் ஒரு பாதியையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.
* 30 நிமிடம் நன்கு ஊற வைத்த பின், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இறுதியில் முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
பப்பாளி, அன்னாசி மற்றும் தர்பூசணி பேக்* மிக்ஸியில் சிறிது பப்பாளி, அன்னாசி மற்றும் தர்பூசணி போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமம் இளமையுடன் காட்சியளிக்கும். இந்த செயலை அடிக்கடி செய்தால் நல்ல பலனைக் காணலாம்.
வெள்ளரிக்காய் மற்றும் முட்டை* முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்ஸியில் சிறிது வெள்ளரிக்காயைப் போட்டு அரைத்து, வெள்ளைக்கருவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அத்துடன் சில துளிகள் விருப்பமான நறுமண எண்ணெய் எதையாவது சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.
காபி மற்றும் உலர்ந்த முந்திரி* மிக்ஸியில் சிறிது உலர்ந்த முந்திரி பழத்தைப் போட்டு அத்துடன் சிறிது காபித் தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு நீரால் முகத்தைக் கழுவி, முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையாவது பயன்படுத்துங்கள்.
முட்டை வெள்ளைக்கரு* ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு முட்டையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி குறைந்தது 30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* இறுதியில் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
தேன், பேக்கிங் சோடா மற்றும் க்ரீமி பால்* ஒரு பௌலில் க்ரீமி பால், தேன் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* பின் துணியால் முகத்தைத் துடைத்து, மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்
கேரட் மற்றும் கொய்யா* ஒரு பௌலில் பாதி கேரட் மற்றும் 1 கொய்யாப் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். அதன் பின் வறட்சியைத் தடுப்பதற்கு மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
தயிர் மற்றும் பீச் பழம்* ஒரு பீச் பழத்தை நன்கு அரைத்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி கைவிரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.
எலுமிச்சை சாறு மற்றும் முட்டை* ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினைக் கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி , 2-3 நிமிடம் மசாஜ் செய்து உலர வைக்க வேண்டும்.
* முகத்தில் தடவிய கலவை நன்கு காய்ந்த பின் முகத்தை நீரால் தேய்த்துக் கழுவ வேண்டும். இறுதியில் மாய்ஸ்சுரைசர் எதைனும் பயன்படுத்துங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் அனைத்திலும் சரும செல்களுக்குத் தேவையான சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இக்கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்






