மெதிரிய பிரதேசத்திலுள்ள சிறுமி ஒருவரை பார்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த தினுல்யா சனாதி என்ற சிறுமியை ஜனாதிபதி நேரில் சென்று சந்தித்துள்ளார்.நேற்று மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.இதன்போது குறித்த சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது நலன் விசாரிப்பதற்கும் ஜனாதிபதி மறக்கவில்லை.மிகவும் பரபரபான வேலைகளிலும் மிகவும் சிரித்த முகத்துடன் இந்த சிறுமியிடம் ஜனாதிபதி உரையாடியுள்ளார்.
அண்மையில் கவுடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதியை பார்ப்பதற்காக மேடைக்கு வந்த சிறுமி ஒருவர் ஜனாதிபதி மடியில் அமர்ந்திருந்து உரையாடிய செய்தி வெளியாகி இருந்தன.
அந்தப் பகுதிக்கு ஜனாதிபதி வருகைத்தந்ததனை அறிந்து கொண்ட தினுல்யா, அவரை பார்ப்பதற்காக தனது தந்தையுடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.