அண்ணாமலையார் பூஜைக்கு வாங்கிய ஆப்பிள் பழத்தில் விநாயகர் உருவம் காணப்பட்டால் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.
நேற்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாருக்கு பூஜைக்காக வாங்கி வந்த ஆப்பிள் பழத்தில் விநாயகர் உருவம் காணப்பட்டது.
இதைக்கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
நாள்தோறும் திரளான பக்தர்கள் வந்து இங்குள்ள உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் பூஜைக்காக தினமும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு பூக்கள், பழங்கள் வாங்குவது வழக்கம்.
அதன்படி, நேற்று அண்ணாமலையாருக்கு பூஜை செய்வதற்காக பழங்கள் வாங்கி வந்த போது இதில் ஒரு ஆப்பிள் பழத்தில் விநாயகர் உருவம் இருந்தது. இதைக்கண்ட பக்தர்கள் பக்தி பரவத்தில் மெய்சிலிர்த்தனர்.