கருப்பாக இருக்கும் ஒவ்வொருவருக்குமே வெள்ளையாக வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். கருப்பு அழகு தான், இருந்தாலும் சில இடங்களில் சரும நிறங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அனைவருக்குமே வெள்ளையாக வேண்டுமென்ற எண்ணம் எழுகிறது.
அதற்காக பலர் தங்களது கை, கால், முகம், கழுத்து மற்றும் உடலின் பல பகுதிகளில் உள்ள கருமையையும் போக்க பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
கற்றாழை
கற்றாழை சரும கருமையைப் போக்கும் அற்புத பொருள். இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமைகள் மறைய ஆரம்பித்துவிடும். மேலும் கற்றாழை பாதிக்கப்பட்ட சரும செல்களைப் புதுப்பிக்கும்.
கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதனை நேரடியாக கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்கும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், எப்பேற்பட்ட கருமையையும் அகற்றும். இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீங்கி, சரும நிறத்தை மேம்படுத்தும்.
மேலும் எலுமிச்சை சாறு புதிய செல்களின் உருவாக்கத்தையும் தூண்டும். உங்கள் அந்தரங்க பகுதியைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க பாதி எலுமிச்சையை எடுத்து, கருப்பாக உள்ள அந்தரங்க பகுதியில் தேய்த்து, 10-15 நிமிடம் கழுத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இல்லாவிட்டால்,1/2 எலுமிச்சையின் சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் தன் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.
தக்காளி
தக்காளி சரும கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. இதில் உள்ள லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், சூரியனால் சருமம் பாதிப்படையாமல் தடுக்கும்.
அதற்கு தக்காளியின் ஒரு துண்டை எடுத்து, அந்தரங்க பகுதியில் 2 நிமிடங்கள் தேய்த்து, 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சந்தனம்
ஒரு பௌலில் 1/2 எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் 3-4 டீஸ்பூன் சந்தனப் பவுடர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அதன் பின் இந்த கலவையை இரவில் படுக்கும் முன், கருமையாக உள்ள பகுதிகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுங்கள்.
இச்செயலை கருமை போகும் வரை தினமும் இரவில் பின்பற்றுங்கள்.