`இரட்டைக் குழந்தைகளுடன் ஜெயலலிதா’ – வைரலாகும் புகைப்படங்கள்!

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று, கிருஷ்ணபிரியா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா

இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அதில் முதல் இரண்டு குழந்தைகள் இரட்டைக் குழந்தைகளாக ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்றே பிறந்தனர். அதனால் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று, கிருஷ்ணபிரியா தன் குழந்தைகளின் புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்து ‘அன்று என் கருவறையில் இருந்த இரட்டைக் குழந்தைகளின் பிறந்த நாளும் இன்றே… மறக்க இயலாத பல நினைவுகளைத் தன்னுள் அடக்கிய தினம் இத்தினம்’ என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா கிருஷணப்பிரியாவுக்கு வளைகாப்பின்போது வளையல் அணிவிக்கும் புகைப்படம், இரட்டைக் குழந்தைகளுடனான புகைப்படம் ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளார் கிருஷ்ணபிரியா. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. குழந்தைகள் பிறந்த அன்று ஜெயலலிதா மருத்துவமனைக்கே சென்று அங்குள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.