பதவிப் பிரமாணம் செய்து கொள்ள அமைச்சர்களுக்கு ஜனாதிபதி முக்கிய அழைப்பு!

இன்று முற்பகல் 11.00 மணிக்கு புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.

இதற்காக தற்போதைய அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் இந்த அழைப்பினை விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டிற்கு அமைய இந்த அமைச்சரவை நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சுப் பதவிகள் தொடர்பில் இன்னும் அமைச்சர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாகவே அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என ஊகம் வெளியிடப்பட்டு வரும் போதிலும் இதுவரையில் அமைச்சர்களின் பதவிப் பிரமாணம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.