`தொல்லை கொடுத்தான்; அத்தையின் கணவனே பாலியல்!”

பலருக்கும் வீட்டில் இருந்துதான் செக்‌ஷுவல் ஹராஸ்மென்ட் தொடங்கும் என்பார்கள். எனக்கும் அது என் அத்தையின் கணவன் மூலமே நடந்தது.

பாலியல் தொல்லை

பெங்களூருவில் இருக்கும் என்னுடைய அத்தை வீட்டுக்கு, ஒரு திருமணத்துக்காகச் சென்றிருந்தேன். நான், அத்தை, அவருடைய மகன் அனைவரும் ஒரே ரூமில் உறங்கினோம். அப்போது எனக்கு 12 வயது, அவருக்கு 30 வயதிருக்கும். அவர் பெட்டிலும், நானும் என் அத்தையும் கீழே பாய் விரித்தும் படுத்திருந்தோம். விடியற்காலையிலேயே அத்தை சமையல் வேலைகளுக்காக எழுந்து சென்றுவிட்டார். உறங்கிக்கொண்டிருந்தபோதே என்மீது திடீரென ஏதோ ஒரு பெரிய எடையை உணர்ந்தேன். கண் திறந்து பார்த்தால், அவன் என்மீது படுத்திருந்தான். அவனை மிகுந்த சிரமத்துடன் என்னிலிருந்து அகற்ற முயன்றேன். ஆனாலும், அவன் அதைத் தாண்டிய உடல் பலத்தோடு என்னை அழுத்தினான். எனக்கு ‘அத்தை’ என்று கத்த வாய்வரவில்லை. `மாமா விடுங்க’ என்றேன் நசுங்கிய குரலில். அவனைப் பிடித்து தள்ளியபடியே இருக்கவே, அவன் எழுந்து அறையிலிருந்து வெளியே சென்றுவிட்டான். பிறகு காலை எதுவும் நடக்காததுபோல, ஹாலில் அமர்ந்தபடி, `தண்ணி எடுத்துட்டு வா’ என்றான் என்னிடம். ஆனால், அந்த அதிகாலை இருட்டிலிருந்து என்னால் இன்னும் வெளிவர முடியவில்லை. பெண் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் மற்றவர்களுடன் தங்க அனுமதிக்காதீர்கள் பெற்றோர்களே!