நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகை. பல பெரிய நடிகர்களின் ஹிட் படங்களில் நடித்தவர். அண்மையில் அவரில் நடிப்பில் பாகமதி வெளியானது. ரஜினியும் அனுஷ்காவை வாழ்த்தினார்.
தற்போது தமிழில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் படம் வெளியாகியுள்ளது. பக்தி படமான இதில் நாகார்ஜூனா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் தான் தற்போது பிரச்சனைக்கு காரணம்.
இதில் வைரமுத்து ஆண்டாளின் பெருமையை உணர்ந்தவர், உயர்த்தியவர் என எழுதியிருந்தார்களாம். இதனால் சிலர் படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களாம்.
தற்போது படத்தயாரிப்பாளர் பதிலடி கொடுத்துள்ளார். விளம்பரத்திற்காக வழக்கு போடுபவர்கள் படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் வந்து பார்த்துவிட்டு பின்னர் தவறாக இருக்கிறதா என சொல்லுங்கள் என்று கூறியுள்ளாராம்.






