இளவரசி டயானா, உலகிலுள்ள அனைவரும் தன்வீட்டு பிள்ளை என்று நினைக்கும் அளவிற்கு ஒரு அந்நியோன்னியமான முகம் அரச குடும்பத்தின் இளவரசி என்றாலும் பந்தா காட்டாத அவரது குணம் அவர் மறைந்து 20 ஆண்டுகள் ஆன பின்பும் மக்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
எலிஸபெத் மகாராணியின் செயலாளரைத்தான் டயானாவின் இரண்டாவது அக்கா ஜேன் திருமணம் செய்து கொண்டிருந்தார்.
அக்காவைப் பார்க்கச் செல்லும் டயானா அவ்வப்போது அரண்மனை விழாக்களிலும் பங்கு கொள்வதுண்டு.
இது தவிர டயனாவின் அப்பா அல்டாஃப், இங்கிலாந்து அரசு குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்ததால் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவார்.
இளவரசர் சார்லஸ் டயானாவைப் பார்த்தது அப்படி ஒரு விழாவில்தான். தனது திருமணத்தை ரொம்ப நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த சார்லஸை முதல் பார்வையிலேயே கவர்ந்து விட்டார் டயானா.
பின் இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணமே சார்லஸ் – டயானாவுடையது தான்.
டயானா தொடர்பில் பல மர்மமான சுவாரஸ்யங்கள் அடங்கிய காணொளி ஒன்றும் வைரலாகி வருகின்றது.