அமெரிக்காவின் மிகச்சிறந்த ஜனாதிபதியாக ஆபிரகாம் லிங்கனையும், செயல்பாட்டில் மிகமோசமாக கடைசி இடத்தில் டொனால்ட் டிரம்ப்பையும் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் கருத்துக்கணிப்பில் தெரிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழ பேராசிரியர் பிரண்டன் ரோட்டிங்காஸ், போய்ஸ் ஸ்டேட் பல்கலையின் பேராசிரியர் ஜஸ்டின் வாகன், ஆகியோர் இணைந்து, அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதிகள், அரசியல் தலைவர்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர்.
குறித்த ஆய்வில் கலந்து கொண்ட அரசியல்வாதிகளில் 57 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களும்,
13சதவீதம் குடியரசுக்கட்சியைச்ச சேர்ந்தவர்களும், 27சதவீதம் சுயேட்சை அரசியல்வாதிகளும் ஆவர்.
இதில் அமெரிக்காவின் மிகச்சிறந்த ஜனாதிபதியாக ஆபிரஹாம் லிங்கனை அந்நாட்டு அரசியல்வாதிகள் தெரிவு செய்துள்ளனர், மேலும், செயல்பாட்டில் மிக மோசமான ஜனாதிபதியாகவும், கடைசி இடத்திலும் பெரும்பாலோர் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை தெரிவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு ஜனாதிபதிகளுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அரசியல்வாதிகள் வாக்களித்தனர்.
அதன்படி ஆபிரஹாம் லிங்கனுக்கு பெரும்பாலானோர் 90 முதல் 100 மதிப்பெண்கள் வரை அளித்து, அவரின் எந்த செயலையும் விமர்சிக்காமல் இருந்தனர்.
அதேசமயம், சராசரியாக செயல்பட்ட ஜனாதிபதிகளுக்கு 50 மதிப்பெண்களும், மோசமான செயல்பட்டவர்களுக்கு விமர்சனத்தையும், மதிப்பெண்கள் அளிக்காமல் இருந்தனர்.
குறித்த ஆய்வி்ல் மிகச்சிறந்த ஜனாதிபதியாக இன்னும் அந்நாட்டு மக்கள் ஆபிரஹாம் லிங்கனை கருதுகின்றனர்.
அவருக்கே முதலிடத்தை அளித்துள்ளனர். 2-வதாக ஜார்ஜ் வாஷிங்டன், 3-வதாக பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், 4-வதாக தியோடர் ரூஸ்வெல்ட், 5-வதாக தாமஸ் ஜெபர்சன், 6-வதாக ஹேரி எஸ். ட்ரூமன், 7-வதாக விட் ஈசன்ஹேவரை தெரிவு செய்துள்ளனர்.
ஆனால், தற்போதைய ஜனாதிபதி டிரம்பை விமர்சனம் செய்தது மட்டுமின்றி, அவருக்கு 44-வது இடமான, கடைசி இடத்தையும் அளித்துள்ளனர்.
சிறந்த 5 ஜனாதிபதிகள்:
1. ஆபிரஹாம் லிங்கன்
2. ஜார்ஜ் வாஷிங்டன்
3. பிராங்ளின் டிலானோ ரூஸ்வெல்ட்
4. தியோடர் ரூஸ்வெல்ட்
5. தாமஸ் ஜெபர்சன்
கடைசி 5 ஜனாதிபதிகள்:
1. டொனால்ட் டிரம்ப்
2. ஜேம்ஸ் புக்காணன்
3. வில்லியம் ஹென்றி ஹாரிசன்
4. பிராங்க்ளின் பியர்ஸ்
5. ஆன்ட்ரூ ஜான்சன்






