சளி, இருமல், தலைவலியால் அவஸ்தையா? அற்புத பானம் ….

கடுமையான சளி, இருமல், தலைவலி போன்ற இயற்கை உடல் உபாதைகளில் இருந்து நம்மை மீட்டுக் கொள்ள உதவும் ஒரு அற்புத பானம் தான் திரிகடுக காஃபி.

சுக்கு, மல்லி திப்பிலி என்ற மூன்றும் சேர்ந்து திரிகடுக காஃபியாக அழைக்கப்படும் இந்த வகை பானம், மனித உடலுக்கு பல நன்மைகளை தரும் குணம் கொண்டது.

சுக்கு, மல்லி, திப்பிலி என மூன்றிலும் 50 கிராம் அளவு எடுத்து நைஸாக அரைத்து அதனை பொடியாக்கி தேனுடன் கலந்து சாப்பிடும் பட்சத்தில் சளி, இருமல், கபக்கட்டு பறந்து போகும்.

இப்படி அருந்த கடினப்படும் நண்பர்கள், ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதை பாலுடன் கலந்து சிறிதளவு நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லத்துடன் ஏலம் சேர்த்து திரிகடுக காஃபியாக அருந்தலாம்.

திரிகடுகத்தில் சேர்க்கப்படும் திப்பிலி காரமாக இருப்பதாக சிலர் உணர்ந்தால், திப்பிலியின் அளவை குறைத்து கொள்ளுங்கள்.

காய்ந்த இஞ்சி தான் சுக்கு. அந்த மூன்றையும் சேர்த்து பொடியாக அறைத்து வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் யாருக்கேனும் சளித்தொல்லை, இருமல், கபம் இருக்கிறதோ அவர்களுக்கு காஃபியாக கலந்து கொடுத்து சளியில் இருந்து தப்பிக்க உதவுங்கள்.