El Salvador நாட்டில் கருக்கலைப்பு செய்ததாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண் பத்தாண்டுகளுக்குப்பின் விடுதலை செய்யப்பட்டார்.
El Salvador நாட்டில் கருக்கலைப்பு தணடனைக்குரிய குற்றமாகும். இதனால் கருச்சிதைவு ஏற்பட்ட பெண்கள் பலர் தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் இந்தத் தீர்ப்பு மக்களிடையே பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பமாக இருந்த Teodora del Carmen Vásquez என்னும் அந்தப் பெண்ணிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்த அவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.
கழிவறையில் சுய நினைவிழந்து விழுந்த அவருக்கு குறைப்பிரசவம் ஏற்பட்டது. நினைவு வந்தபோது தனது குழந்தை இறந்து கிடப்பதை அவர் கண்டார்.
அவர் கருக்கலைப்பு செய்துவிட்டதாகக் கூறி பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
El Salvador நாட்டில் கருக்கலைப்பு பயங்கரக் குற்றமாகக் கருதப்படுவதால் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தனக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்கும் வசதியில்லாத அவர் 10 ஆண்டுகளாக சிறையிலேயே இருந்தார்.
இந்நிலையில் Amnesty International Norway என்னும் அமைப்பு அவருக்கு ஆதரவாக பிரச்சாரங்கள் மேற்கொண்டது.
மனித உரிமைகள் அமைப்புகளும் இதை வன்மையாகக் கண்டித்தன. ஆச்சரியப்படும் விதமாக பத்தாண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு Carmen விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதனால் அவரது குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.