இந்தியாவில் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பள்ளிக் கழிப்பறையை வெறும் கைகளால் எம்பி ஒருவர் சுத்தம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவர் ஜனார்த்தன் மிஸ்ரா.
அவர் எம்.பி-யாக உள்ள தொகுதியில் உள்ள பள்ளிகளில் கடந்த 15-ஆம் திகதி ஆய்வு மேற்கொண்டபோது, கஜூவா கிராமத்தின் பள்ளி கழிப்பறை பராமரிப்பின்றி கிடந்துள்ளது.
#WATCH: BJP MP Janardan Mishra clean a school toilet in Rewa’s Khajuha Village after it had clogged and been out of use due to accumulation of soil. #MadhyaPradesh (15.02.2018) pic.twitter.com/O0kx7OJ19d
— ANI (@ANI) February 17, 2018
அதை கண்டு அதிர்ச்சியடைந்த எம்.பி, அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதை தவிர்த்து உடனடியாக தானே களத்தில் இறங்கி அதை சுத்தம் செய்துள்ளார்.
பாஜக கட்சியைச் சேர்ந்த ஜனார்த்தன், மோடியின் தூய்மை திட்டத்தின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது.
மேலும், ஜனார்த்தனின் அந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் வைரலாக பரவி வருகிறது.







