மகனோ கோமாவில்.. அடகு கடைக்காரரின் தொந்தரவால் கண்ணீர் விடும் தந்தை

தமிழகத்தில் அடகுகடைக்காரர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், செய்வதறியாமல் நிற்பதாக தந்தை கண்ணீர் வடித்துள்ளார்.

மேட்டூர் மாதையன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜப்பா, மேஸ்திரியாக வேலை செய்து வரும் இவருக்கு மாதம்மாள் என்ற மனைவியும் கவிதா, அனிதா என இரண்டு மகள்களும் ஜெகதீசன் என ஒரு மகனும் இருக்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு படித்துள்ள ஜெகதீசன் செண்ட்ரிங் வேலை செய்து வந்ததுடன், வீட்டுக்கு தெரியாமல் திருட்டு வேலையிலும் ஈடுபட்டுள்ளான்.

இந்நிலையில் அந்த ஊரில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே நடந்த சண்டையில் ஜெகதீசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் சுயநினைவு இழந்த ஜெகதீசன் கடந்த 3 வருடமாக கோமா நிலையில் உள்ளார். அவருக்கு ஆப்ரேஷன் செய்வதற்காக ராஜப்பா ஆறுமுகம் என்பவரிடம் ரூபாய்16,000-த்துக்கு மோதிரத்தை அடகு வைத்துள்ளார்.

அதற்காக ரூபாய் 22,000-க்கும் மேல் வட்டி கட்டியும் இன்னும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக ராஜப்பா கூறியுள்ளார்.

இது குறித்து ராஜப்பா கூறுகையில், மகனின் ஆப்ரேசனுக்காக அறுமுகத்திடம் பணம் வாங்கினேன். ஆனால் தற்போது அதற்கு அதிகமாக பணம் கொடுத்தும், பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்கிறார்.

மேஸ்திரியான நான் அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். குழம்பு சாதம் சாப்பிட்டு கூட 20 நாள்களுக்கும்மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கண்ணீர் வடித்துள்ளார்.

எனக்கு மனித நேயம் இருக்கிறது, பணம் கொஞ்சம் குறைத்துக் கொண்டு கொடுத்தால் கூட வாங்கிக் கொள்வேன், ஆனால் அவர்கள் தற்போது என்ன அசிங்கப்படுத்துவதால் முழுத்தொகையும் கேட்பதாக வட்டிக்கு கொடுத்த ஆறுமுகம் கூறியுள்ளார்.