மூன்று ஆண்டுகளாக மக்கள் அனுபவித்த துயரங்களை தேர்தலில் வெளிக்காட்டியுள்ளனர் என முன்னளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றி தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
எதிர்க்கட்சிக்கு உரிய உரிமைகள் கூட கிடைக்காத நிலையில் இவ்வாறான வெற்றி வரலாற்றில் முன்னொருபோதும் கிடைக்கவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு மாபெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்த அனைத்து மக்களுக்கும் நன்றி பாராட்டுகின்றேன்.
தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி பாராட்டுகின்றேன்.
எப்பொழுதும் வெற்றியீட்ட முடியாத நகரங்களில் கூட பொதுஜன முன்னணி வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.






